கொத்தமல்லி சாதம்
தேவையான பொருட்கள் நான்கு தேக்கரண்டி எண்ணெய் எட்டு அல்லது ஒன்பது பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் ருசிக்கு ஏற்ப நிலக்கடலை ஒரு தேக்கரண்டியளவு கரம் மசாலா ஒரு தேக்கரண்டியளவு கல் உப்பு ஒரு கட்டு கொத்தமல்லி ஐந்து அல்லது ஆறு பல் பூண்டு செய்முறை பூண்டு, பச்சைமிளகாய், கொத்தமல்லி மூன்றையும் நறுக்கிக் கொள்ளவும் நறுக்கிய கொத்தமல்லி, பூண்டு, பச்சைமிளகாயை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். உப்பு சேர்த்து அரைக்கவும் வெங்காயத்தை கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அரைத்த கொத்தமல்லியுடன் சேர்த்து கலக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை தாளித்து சேர்க்கவும சாதத்துடன் கலந்து சாப்பிடவும்.