முட்டைக்கோஸ் சட்னி
தேவையான பொருட்கள்
அரை ஸ்பூன் கடுகு
ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு
ஒரு பெரிய வெங்காயம்
இருநூறு கிராம் முட்டைக்கோஸ்
கால் கப் நிலக்கடலை
எட்டு பச்சைமிளகாய்
எட்டு பல் பூண்டு
ஒரு ஸ்பூன் கல் உப்பு
நான்கு ஸ்பூன் எண்ணெய்
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறைநிலக்கடலையை வறுக்கவும்
முட்டைக்கோஸை நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பூண்டு, பச்சைமிளகாயை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
வெங்காயத்தை நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.
எல்லா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்க்கவும்.





















Comments
Post a Comment