ஆரோக்கியம் தரும் வெந்தயக் கீரை சித்ரான்னம்
ஆயுர்வேத மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயக் கீரையை பரிந்துரைக்கின்றனர். வெந்தயக் கீரையில் உள்ள இரும்புச் சத்தையும், குளுமை தன்மையை பெறுவதற்காகவும் அனைவரும் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்
வெந்தயக் கீரை
சாதம்
வெங்காயம்
மிளகாய்
இஞ்சி
பூண்டு
எலுமிச்சை பழம்
கரம் மசாலா தூள்
கடுகு
உளுந்து
மஞ்சள் தூள்
உப்பு
எண்ணெய்
செய்முறை
இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சேர்த்து வதக்கவும்.
சாதம் சேர்த்து கலக்கவும்.



















Comments
Post a Comment