எலுமிச்சை அவல் உப்புமா
அவலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு வகைகள் அனைத்தும் சமைப்பது மட்டுமல்ல ஜீரணிக்கவும் எளிதானது.
தேவையான பொருட்கள்
கால் கிலோ அவல்
ஒரு கப் கேரட் துருவல்
ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை
ஒரு கொத்து கருவேப்பிலை
ஏழு பச்சைமிளகாய்
இரண்டு எலுமிச்சை பழம்
ஐந்து ஸ்பூன் எண்ணெய்
செய்முறை
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்
அவலை ரவையாக உடைக்கவும்
நன்றாக கழுவி விட்டு ஊறவைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, நிலக்கடலை, கருவேப்பிலை தாளித்து துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்.
ஊறிய அவல் ரவை, உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.













Comments
Post a Comment