Posts

Showing posts from June, 2020

மசாலா சப்பாத்தி, மசாலா பூரி, மசாலா கட்ஸ்

Image
தேவையான பொருட்கள் செய்முறை வெங்காயம், பூண்டு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து விழுதாக அரைக்கவும் கோதுமை மாவு, உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும். இந்த மாவை சப்பாத்தி, பூரி, மினி பிஸ்கட் என உங்கள் தேவைக்கு ஏற்ப திரட்டி கொள்ளவும். சப்பாத்தியை தவாவில் வேக வைக்கவும். பூரி, மினி பிஸ்கட் இரண்டையும் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மிளகாய் பழ தொக்கு

Image
ஊறுகாயாக, இட்லி தோசைக்கு தொட்டு கொள்ள, சாதத்துடன் கலந்து சாப்பிட, நூடுல்ஸ் பாஸ்தாவுக்கு காரம் சேர்க்க இதை பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள் பழுத்த மிளகாய் பூண்டு எலுமிச்சை பழம் செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் பழம், பூண்டு சேர்த்து வதக்கவும். வதக்கிய மிளகாயுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தாராளமாக எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் தாளித்து சுருள வதக்கவும். இந்த வலைப்பதிவில் உள்ள மற்ற ஊறுகாய் தொக்கு வகைகள் பெரிய நெல்லிக்காய் தொக்கு இஞ்சி பூண்டு தொக்கு மிளகாய்தூள் சேர்க்காத எலுமிச்சை ஊறுகாய்

கருவேப்பிலை துவையல்

Image
தேவையான பொருட்கள் செய்முறை கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, எள், புளி இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். உப்பு சேர்த்து அரைத்து கடுகு உளுந்து தாளித்து கொட்டவும். விருப்பமுள்ளவர்கள் இத்துடன் சிறிது வெல்லம் சேர்க்கலாம். தாளிக்கும் போது பெருங்காயம் சேர்க்கலாம். கடலைப்பருப்புக்கு பதில் உளுத்தம்பருப்பு பயன்படுத்தலாம்.

பப்பாளி காய் மசாலா கூட்டு

Image
வெங்காயம் கரம் மசாலா தூள் மிளகாய் தூள் பாசிப்பயறு பப்பாளி காய் இஞ்சி பூண்டு விழுது கடலைப்பருப்பு செய்முறை பச்சை பயறு, கடலைப்பருப்பு இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். பப்பாளி காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பப்பாளி காய், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். வேக வைத்த பருப்புடன் சேர்த்து கலக்கவும்.

மசாலா இட்லி

Image
தேவையான பொருட்கள் அரிசி ரவை புளித்த தயிர் சீரகம் பச்சைமிளகாய் இஞ்சி செய்முறை பச்சைமிளகாய், உப்பு, சீரகம், இஞ்சி சேர்த்து அரைக்கவும். தயிரில் அரிசி ரவை, அரைத்த விழுது, எண்ணெய் விட்டு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தேவையான அளவு சமையல் சோடா கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.

எலுமிச்சை பழ சட்னி

Image
எலுமிச்சை பழ தோலில் நார் சத்து அதிகம். எலுமிச்சை பழ தோலில் உள்ள 'நரிஞ்ஜெனின்' புற்றுநோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் வாய்ந்தது. எலுமிச்சை பழத்தில் சித்ரான்னம், ரசம், ஜூஸ் செய்து சாப்பிடும் போது தோலில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்காது. தேவையான பொருட்கள் எலுமிச்சை பழம் நல்லெண்ணெய் பெருங்காயத்தூள் மிளகாய் தூள் செய்முறை எலுமிச்சை பழங்களை நறுக்கி விதைகளை நீக்கி சாறு பிழிந்து தனியே வைக்கவும். எலுமிச்சை பழ தோலை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய் தூள், தனியே எடுத்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும். கடுகு பெருங்காயம் தாளித்து கொட்டவும்